Sivapu Arisi
Red Rice is rich in iron and vitamin, which together help in the production of RBC (red blood corpuscles) in our body, which is considered as an essential element for good skin health. The antioxidants in the rice may help in fighting free radicals, which protect our skin from premature ageing.
Health Benefits of Sivapu Arisi
-
Red rice helps in controlling diabetes
-
Red rice can also prevent Asthma
-
Improves consumption of oxygen
-
Red rice helps in digestion
-
Red rice keeps heart diseases at bay
-
Helps in reducing fatigue
நம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஏராளமான நன்மைகளும், சத்துக்களும் கொட்டிக்கிடக்கின்றன.
அதில் பாரம்பரிய அரிசி வகைகளில் கவுணி அரிசி குடும்ப வகையை சேர்ந்தது சிவப்பு கவுணி அரிசி.
இது சற்று தடிமனான அரிசி வகை. இந்த வகை அரிசியில் அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், பைட்டோகெமிக்கல்ஸ், மற்றும் சில உயிர் சத்துக்களும் அடங்கியுள்ளது.
பழங்காலத்தில் இருந்தே இந்த வகையான அரிசி நம் முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மேலும் இது பல வகையான நோய்களுக்கு தீர்வளிக்கின்றது. அந்தவகையில் இதனுள் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். எனவே இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
சிவப்பு கவுனி அரிசி நுரையீரல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இந்த அரிசியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. அதோடு இந்த அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்ஸிஜன் சுற்றோட்டம் மேம்பட்டு, ஆஸ்துமா பிரச்சனை தடுக்கப்படும்.
தினமும் சிவப்பு கவுனி அரிசியை சாப்பிடால், அது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் உயிரணுக்களுக்கும் புழக்கத்தில் விட உதவும். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டு, மனநிலை சிறப்பாகவும், நீங்கள் மிகவும் ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.
சிவப்பு கவுனி அரிசி உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் மற்றும் குடலியக்கமும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இது ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படக்கூடியது.
சிவப்பு அரிசியின் தவிடு கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், சிவப்பு கவுனி அரிசியை தினமும் சமைத்து சாப்பிடுங்கள்.
சிவப்பு கவுனி அரிசி சிறப்பானது. ஏனெனில் இந்த அரிசியில் மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும் போது நார்ச்சத்து அதிகம் என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது.
சிவப்பு கவுனி அரிசியில் உள்ள தவிடு நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.
தினமும் சிவப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால், முதுமை காலத்தில் சந்திக்கும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.