సెనగలు | ಕಡಲೆ | കടല | கொண்டைக்கடலை
HEALTH BENEFITS OF CHICKPEAS
Some of the health benefits of Chickpeas are:
1 . Control Blood Sugar Levels
-Alike other legumes, chickpeas provide the body with a slow and gradual release of energy over an extended period and thereby help in stabilizing the blood sugar levels.
2 . Promote Heart Health
-Studies suggest that beans help in keeping the arteries clear from plaque build-up and thereby maintains healthy blood pressure levels and decreases chances of cardiac arrest.
-Chickpeas have been found to balance unhealthy “bad cholesterol” and prevents heart problems.
3 . Help In Weight Loss
-Rich in fiber and protein, chickpeas helps one feel full and curb cravings. Paired with other vegetables and fruits, chickpeas serve as an important ingredient for your salads and snacks.
4 . Aid Digestion
-Chickpeas are loaded with fiber. Studies suggest that fiber aids digestion and also decrease the chances of related diseases such as constipation. It also helps in maintaining the pH levels and the microbes of the gut, thereby facilitating digestion
5 . Prevent Cancer
-Rich in phytonutrients and fiber content, chickpeas has been found to arrest cancerous cells from further growth especially in case of colon cancer.
6 . Delay Ageing
-Rich in antioxidants such as Vitamin C and E and beta carotene, chickpeas help in fighting the oxidative stress and thereby delays ageing.
ஊட்டச்சத்துக்கள்:
28 கிராம் கொண்டைக்கடலையில்,
கலோரிகள் – 46
கார்போஹைட்ரேட்டுகள் – 8 கிராம்
நார்சத்து – 2 கிராம்
புரதசத்து – 3 கிராம்
ஃபோலேட் – 12% (தினமும் உட்கொள்ள வேண்டிய அளவு)
இரும்புசத்து – 4%
பாஸ்பரஸ் – 5%
தாமிரம் – 5%
மாங்கனீசு – 14%
எடையைக் குறைக்கும்:
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
கொண்டைக்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளன. மேலும் கொண்டைக்கடலையில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் வளமான அளவில் உள்ளதால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கும்:
கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் கொண்டைக்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து வளமான அளவில் உள்ளதால் இரத்த சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்:
கொண்டைக்கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் தினமும் இரவில் படுக்கும் போது கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
மலச்சிக்கல்:
மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள், கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.