Rose Gulkandu is best for summer , Prevents sunburn. Due to its natural cooling properties, it helps to beat the summer heat. Sun exposure can help reduce the risk of heat-related symptoms such as nosebleeds and fatigue. Gulkandu rejuvenates the body. This will keep you refreshed during the summer heat.
*Gulkand is beneficial for acidity, gastritis, skin care, indigestion, ulcer and nosebleed, stress etc.
*It helps to reduce the excess heat in the body.
*Gulkand is good for people who suffer from itches, boils, blisters, wrinkles and acne. “It is a natural anti – ageing treatment”,
*Gulkand is rich in antioxidants and is an energy booster.
*Taking gulkand regularly helps to reduce severe ulcers, constipation and heart burning.
*Use of gulkand in summer helps in preventing sun strokes, nostril bleeding and dizziness.
*It also prevents anaemia, reduces acidity and is a very good blood purifier.
*Gulkand is also an excellent tonic that keeps your metabolism healthy and fit.
ரோஜா குல்கந்து
ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து. இது துவர்ப்பு, இனிப்பு சுவையை சேர்ந்தது.
வெயிலைத் தடுக்கிறது குல்கந்து கோடைகாலத்திற்கு சிறந்தது. அதன் இயற்கையான குளிர்ச்சியான பண்புகள் காரணமாக, இது கோடை வெப்பத்தை வெல்ல உதவுகிறது. சூரிய ஒளி, மூக்கில் இரத்தப்போக்கு மற்றும் சோர்வு போன்ற வெயில் தொடர்புடைய அறிகுறிகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குல்கந்து உடலை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. இதனால் கோடை வெப்பத்தின் போது நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
குல்கந்தை தினசரி எப்படி சாப்பிடலாம்?
* தினசரி குல்கந்துவை சாப்பிட பல வழிகள் உள்ளன. முதலில் ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து, அதனை குடிக்க வேண்டும். அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிட வேண்டும்.
* அடுத்து, அமிலத்தன்மை மற்றும் இதுதொடர்பான பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலில் குல்கந்துவை சேர்த்து உட்கொள்ளலாம். சிறிது குளிர்ந்த பால் எடுத்து, ஒரு டீஸ்பூன் குல்கண்ட் சேர்த்து பகிருங்கள்.
* இல்லையெனில் குல்கந்துவை வெறுமனே கூட சாப்பிடலாம். அல்லது வெத்தலையில் வைத்து மடித்து அதனை சாப்பிடலாம்.
குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது.
*சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
* குல்கண்ட் உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே வெப்பநிலை அதிகம் உள்ள காலங்களில் இதனை சாப்பிடுவது மிகச் சிறந்தது.
* ரோஜா குல்கந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.
*வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்
* ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
* தைராய்டு உள்ளவர்களும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.
* ரோஜா குல்கந்து உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவக்கூடும். உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், இதனை சாப்பிட்டு வர விரைவில் இரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* தலைவலி, சோம்பல் மற்றும் சோர்வு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.